நீங்கள் வாகனம் ஓட்ட கற்று கொள்ள விரும்புகிறீ ர்களா? அதற்கான முதல் படி Leaners Licence (LLR )எடுக்க வேண்டும், அதை எப்படி Online மூலமாக எப்படி எடுப்பது பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

✅ LLR என்றால் என்ன?
LLR என்பது Leaners Licence Registration என்று அழைக்கப்படும் இது ஒரு தற்காலிக உரிமம் ஆகும், வாகனத்தை ஓட்டி பழகுவது அரசாங்கம் வழங்கும் அனுமதி.
🖥️ LLR விண்ணப்பிப்பது எப்படி ?
📌 படி 1 இணையதளத்திற்கு செல்லவும்
👉 https://sarathi.parivahan.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்
📌 படி 2 உங்கள் மாநிலத்தை தேர்வு எடுக்கவும்
நமது மாநிலம் ‘Tamil Nadu’ஐ தேர்வு செய்யவும்.
📌 படி 3 படி 3: New Learner’s Licence (LLR) Apply
“Apply Learner’s ” என்பதை கிளிக் செய்யவும்.
📌 படி 4 தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும்
*பெயர்
*பிறந்த தேதி
*முகவரி
*ரத்த வகை
*அடையாள ஆவண சான்றுகள்
ஆதார் மூலம் KYC Online மூலமும் Update செய்யலாம்.
📌 படி 5: ஆதார் KYC மூலம் செய்யவில்லை என்றால் கீழ்கண்ட ஆவணங்கள் தேவை
*ஆதார் கார்டு
*பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
*வயது மற்றும் முகவரி சான்று
📌 படி 6: Slot Book பண்ணவும் (LLR Test)
உங்களுக்கு வசதியான தேதியையும் நேரத்தையும் தேர்ந்துதெடுத்து Test Slot புக் செய்யவும்.
📌 படி 7: கட்டணம் செலுத்தவும்
130 முதல் 300 வரை இருக்கலாம் .
📚எளிய குறிப்புகள்
*ஓட்ட விரும்பும் வாகனத்தை சரியாக தேர்வு செய்யவும் (Bike /Car /Both )
*தேர்வு ஆன்லைனிலோ அல்லது தேர்வு மையத்திலோ நடைபெறும்
*தேர்வு தமிழ் ஆங்கிலம் அல்லது மற்ற மொழிகளில் எழுதலாம்
📍 முக்கிய தகவல்:
*வயது குறைந்தது 16 (Geared Vehicle 18) இருக்க வேண்டும்
*LLR ஆறு மாதத்திற்கு செல்லுபடியாகும்.
*LLR பெற்ற 1 மாதத்திற்கு பிறகு Driving Licence விண்ணப்பிக்கலாம்.
இந்த LLR செய்முறையை காணொளி முலமாக பார்க்க கீழே கிளிக் செய்யவும்:
👉 இந்த கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிரவும். மேலும் வாகன உரிமம் தொடர்பான தகவல்களுக்கு, இந்த பக்கத்தை Follow செய்ய மறக்காதீர்கள்!