
2025 இல் தமிழ் மற்றும் இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் “Thug Life”. ஆனால் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமலஹாசன் கூறிய ‘கன்னடத்தை சார்ந்த ஒரு கருத்து’ பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
எப்படி ஆரம்பித்தது?
Thug Life திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கமலஹாசன் கூறிய சில வார்த்தைகள்… “கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்து தோன்றியது” என்று அவர் கூறியிருந்தார் இந்த கூற்றுக்கு கர்நாடகா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு விளைவை உண்டாக்கியது. இது மொழி உணர்வை புண்படுத்தும் விதமாக இருப்பதாக கர்நாடகா மக்களும் மற்றும் கர்நாடகா திரைப்பட சங்கமும் தெரிவித்துள்ளார்கள்.
கர்நாடகா திரைப்பட சங்கத்தின் எதிர்ப்பு …
KFCC (Karnataka Film Chamber of Commerce) கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது மேலும் அவர்கள் மன்னிப்பை கேட்கவில்லை என்றால் ‘Thug Life’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியீடு செய்ய முடியாது எனக் கூறிவிட்டது.
கமலஹாசனின் பதில் என்ன?
இந்த எதிர்ப்புக்கு கமல் கூறிய பதில் “நான் கூறியது காதலுடன் ஆனால் அவர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள் எனவே மன்னிப்பு கேட்கத் தேவையில்லை” இதற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் கூறியது… பொதுத்துறையில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக பேச வேண்டும் என்று கூறியது.
திரைப்பட வெளியிட்டில் தாக்கம்
Thug Life திரைப்படம் கர்நாடகாவில் தற்காலிகமாக ரிலீஸ் ஆகது இதனால் ஐந்து முதல் பத்து கோடி முறையான இழப்பு ஏற்படலாம் என திரையரங்கு வட்டாரங்கள் மதிப்பு சொல்கின்றது ஆனால் தமிழ்நாட்டில் படம் மிகப் பெரிய அளவில் வெளியிடப்படுகிறது சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
மற்ற சர்ச்சைகள்
1. வயது வித்தியாசம்
கமலஹாசன் திரிஷா ஜோடி(28 வருட வித்தியாசம்) விமர்சனத்தை சந்தித்தது. இதற்கு மணிரத்தினம் கொடுத்த விளக்கம் இது கதைக்கு தேவையே நடிப்பில் கவனம் செலுத்தவும்.
2. சிம்பு ரெட் கார்டு சர்ச்சை
சிம்புக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது ஆனால் அதை சிம்பு மறுத்தார் எனக்கு எந்த தடையும் இல்லை என்று உறுதியுடன் கூறினார்
முடிவாக…
Thug Life திரைப்பட வெற்றி படத்தின் தரம் மட்டுமல்ல அதை சுற்றியுள்ள சர்ச்சைகளும் அதன் தாக்கத்தை நிர்ணிக்கும் கமலஹாசனின் கருத்து ஒரு மொழி விவாதமாக மாறி உள்ளது இதன் விளைவுகள் விரைவில் முடிவுப்பெறும்.